கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக, மருத்துவமனை வெளியில் இருந்த பெண்களிடம் கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக 50 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, ரத்த அழுத்தம் குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 மருத்துவர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்து வருகிறது.
சமீபத்தில் வெளியான காவேரி மருத்துவமனை அறிக்கையின் படி, கருணாநிதி ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மருத்துவமனை சென்று உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி, அங்கிருந்த பெண்களிடம் திமுக தலைவர் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி வருகிறார். உடல்நிலை சீராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

