டிடிவி தினகரன் சிறையிலிருந்து வெளியே வந்ததை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
முதலில் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என அறிவித்தவர், சிறையிலிருந்து வந்தவுடன் கட்சிப் பணிகளை தொடரப்போவதாக பேட்டியளித்தார்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த ஜெயக்குமார், தினகரனை கட்சியை விட்டு விலக்கி வைப்பதாகவும், அவர்கள் தலையீடு இல்லாமல் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி தொடரும் எனவும் அறிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிடிவி தினகரன், 60 நாட்கள் வரை தான் பொறுத்திருப்பேன், கட்சி வளர்ச்சி பாதையில் செல்லவில்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பேன் என அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று ஆளும் கட்சி எம்எல்ஏ-க்களான 11 பேர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இன்று மேலும் ஏழு எம்எல்ஏ-க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தனர், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.