அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் திடீர் சுகயீனமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்து ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அம்பலங்கொட, தர்மாஷோக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நெஞ்சு வலி மற்றும் மூச்சு விட சிரமம் காரணமாக நேற்று அதிகாலை 12.05 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 1.05 மணியளவில் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவி தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]