அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யின் விலை 25 ரூபா முதல் 30 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி மீனவர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் அனைவருக்கும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 70 ரூபா முதல் 80 ரூபாவுக்கு திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடத்தப்ட்ட பேச்சுவார்த்தையின் பயனாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட திறைசேரி உயரதிகாரிகளுடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சு வார்த்தையின் பயனாகவும் இந்த விலை குறைப்பு செய்யப்ட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.