Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாவடி சுதுமலை வீதி போக்குவரத்துக்கு தடை

March 24, 2020
in News, Politics, World
0

தாவடி சுதுமலை வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது

முற்றுகையிடப்பட்டதாக கூறப்பட்ட தாவடிக் கிராமம் இன்று காலை 8.30 மணியில்

அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் , பொதுச் சுகாதார அதிகாரி , பொலிசார் , இராணுவத்தினர் உள்ளனர்.
யாழ்ப்பாணம் தாவடி சுதுமலை வீதியானது இன்று காலையிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் தாவடி பகுதியில் கிருமித் தொற்று அகற்றும் வேலைதிட்டமானது சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியூடாக தாவடி சந்தியில் இருந்து சுதுமலைக்கு செல்லும் பாதையில் குறித்த ஒரு பகுதியானது பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருந்து வெளியே செல்பவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ராணுவம் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எவரும் அவ்விடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் குறித்த வீதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாளாந்த ஊதியம் பெறுவோருக்கு உதவி – பிரதம மந்திரி

Next Post

காலையில் இருந்து கடைகளில் அலைமோதும் யாழ்ப்பாண மக்கள்

Next Post

காலையில் இருந்து கடைகளில் அலைமோதும் யாழ்ப்பாண மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures