தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 8பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளனர். நேற்றையதினம் 4 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் நான்கு மீட்கப்பட்டுள்ளனர் எனவும் மீட்கப்பட்டவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிறுவர்களின் 25 வயது பயிற்சியாளர் இன்னமும் குகை அமைப்புக்குள்தான் இருக்கிறார் எனவும் மீதமுள்ள நான்கு சிறுவர்களையும் பயிற்சியாளரையும் நாளை செவ்வாய்கிழமை மீட்க மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

