தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம், எந்தவொரு நபரும் விசா இன்றி இலங்கைக்கு வரமுடியும்.
இதன்மூலம் இலங்கைக்கு வரப் போவது யார். இதன்முலம் சந்தோஷப்படப் போவது யார்? அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றி நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” என கூறினார்.

