Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாய்ப்பால் தானம்

August 2, 2017
in News, World
0
தாய்ப்பால் தானம்

அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது எலிசபெத் ஆண்டர்சன். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், Hyperlactation Syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச் சுரக்கும் பாலைவிட, 10 மடங்கு அதிகமான பால் இவருக்குச் சுரக்கிறது.

அதாவது ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது! இதுவரை 2,271 லிட்டர் பாலை, தானமாக வழங்கியிருக்கிறார்! ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பால் எடுப்பதற்கும் மீதி 5 மணி நேரத்தைப் பதப்படுத்துவதற்கும் செலவிடுகிறார். “என் முதல் மகள் பிறந்தபோது தாய்ப்பாலே சுரக்கவில்லை.

குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். இரண்டாவது குழந்தை பிறந்தபோது, எதிர்பாராத விதமாகப் பால் அதிகம் சுரக்கும் குறைபாடு வந்துவிட்டது. என் குழந்தையால் குடிக்கவே முடியாது, அவ்வளவு வேகமாகப் பால் வெளியேறும். அப்போதுதான் தாய்ப்பாலைத் தானம் செய்ய முடிவெடுத்தேன். இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு, பாலுக்காக 10 மணி நேரம் செலவிடுவது எளிதான விஷயம் இல்லை.

ஆனால் முதல் குழந்தைக்குப் பால் இல்லாமல் நான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வேலையில் மூழ்கியிருக்கிறேன்.

தினமும் 5 வேளை பாலைக் கறந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவேன். இந்தப் பகுதியில் இருக்கும் இளம் தாய்மார்களின் குழந்தைகள், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்தவர்களின் குழந்தைகள், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகப் பாலை வழங்கி வருகிறேன்.

இந்தப் பகுதியின் தேவை போக எஞ்சியிருக்கும் பாலை கலிபோர்னியா தாய்ப்பால் வங்கிக்குக் கொடுத்து விடுகிறேன். பாலை மணிக்கணக்கில் எடுக்கும்போது மார்பகம் பயங்கரமாக வலிக்கும். ஆனாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் என் பாலைக் குடித்து, ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வலி மறைந்து, அற்புதமான உணர்வு பெருக்கெடுத்துவிடும்.

தாய்ப்பால் என்பது தங்கம் போன்றது. இதை எந்தக் காரணத்துக்காகவும் வீணாக்க முடியாது, வீணாக்கவும் கூடாது” என்கிறார் எலிசபெத்.

Previous Post

மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதி இளைஞரும், மாடும் பலி

Next Post

டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு 2,000 பேர் பணியில்

Next Post
டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு 2,000 பேர் பணியில்

டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு 2,000 பேர் பணியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures