Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாயைக் கொலைசெய்த மகன் – திருமலையில் கொடூரம்

April 5, 2020
in News, Politics, World
0

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்றிரவு மகனின் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (வயது 57) எனவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில், மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், மருமகள், சந்தனவெட்டை, 64ஆம் கட்டையிலுள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கும் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தாயார் இது தொடர்பாக விசாரிப்பதற்காக வீதியால் சென்று கொண்டிருந்தபோது, அவரது மகன் எதிரில் வருகை தந்தார் எனவும், தகராறு தொடர்பில் கேட்டபோது தாயாரை மகன் அங்கேயே அடித்துக் கொலைசெய்துள்ளார் எனவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம், மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த சம்பூர் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மகனைக் கைதுசெய்துள்ளனர்.

உயிரிழந்திருந்த தாய்க்கு அருகில் தாக்குதல் நடத்திய மகன் உறங்கிக் கொண்டிருந்தார் எனவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Previous Post

ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலில்!

Next Post

ஊரடங்கு உத்தரவை மீறிய 13,468 பேர் கைது

Next Post

ஊரடங்கு உத்தரவை மீறிய 13,468 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures