வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்த தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் சென்ற பெண் ஒருவரின் பையிலிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் அட்டைகள் திருடர்களால் திருடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பேருந்திலிருந்து கீழே இறங்கிய குறித்த பெண் தனது பை திறக்கப்பட்டுள்ளதை அவதானித்த போது அதிலிருந்த பணப்பை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் பொலிசார் விரைந்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணிற்கு அருகே பேருந்தில் நின்று வந்த தாய் மற்றும் மகள் இருவரையும் சந்தேகத்தில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன், பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

