நெதர்லாந்தில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நெதர்லாந்தில் Utrecht நகரத்தில் சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
சிறுவன் தனது தந்தை வேலைக்கு சென்ற பிறகு தாயின் கார் சாவியை எடுத்து கொண்டு காரில் தனியாக சென்றுள்ளான்.
இதேவேளை, சிறுவன் காரை ஓட்டிச் சென்று இரண்டு கார்கள் மீது மோதியுள்ளான்.
இதனையடுத்த சிறுவன் குளிரில் தனியாக தெருவில் நடந்து செல்வதைக் கண்டு கவலையடைந்த அருகில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
நான்கு வயது சிறுவனுக்கு பொலிஸ் நிலையத்தில் சொக்லட் மற்றும் ஒரு கரடி பொம்மை கொடுக்கப்பட்டது.
பின்னர் தாயை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்ததோடு, எதிர்காலத்தில் காரின் சாவியை மறைத்து வைக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
‘பார்முலா-1’ கார்பந்தயத்தில் சிறுவனுக்கு எதிர்காலம் உண்டு எனவும், சிறுவன் புதிய வெர்ஸ்டாப்பன் ‘சாம்பியன் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனது தாய் காரைச் செலுத்துவதைப் பார்த்து சிறுவன் அதனை போல் செய்து பார்த்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, இந்த சிறிய சாரதியின் சாகசம் சத்தத்துடன் முடிவுக்கு வந்துள்ளது,என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.