கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் அதிகரித்துச் செல்வதால் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.
தாயகத்தில் தற்ப்பொழுது தொடர்ந்து ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ளதால் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனர்கள், தினசரி வருமானத்துக்காக வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் சொல்லொணா வறுமைத் துன்பத்தில் அகப்பட்டு தவிக்கின்றனர்.
இது மிக மோசமான நிலைக்கு சென்று பட்டினி சாவு ஏற்படும் அவல நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.
தற்போது வடக்கு கிழக்கில் எழுந்துள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் தம்மிடம் உள்ள குறைந்த வளத்தின் மூலம் தாமாக முன்வந்து தமது உடல் நலனையும் பணையம் வைத்து தன்னார்வமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக தம்மாலன சமூக பணிகளை செய்து வருகின்றனர்.
இவர்களின் கரங்களை பலப்படுத்தி எமது மக்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பது ஒவ்வொரு புலம்பெயர் மக்களதும் அமைப்புகளதும் வரலாற்றுக் கடமையாகும்.

