தாயக மக்களுக்கு உதவுவதாக கூறி வெளிநாட்டில் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .
தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உர்தவுகிறோம் என்ற போர்வையில் இசை நிகழ்வுகள் கலைநிகழ்வுகளை நடாத்தி பணத்தை சேமிக்கும் நபர்கள் ,நிறுவனக்கள் ,அமைப்புக்கள் எவையும் சேகரிக்கும் பணத்தை மக்களுக்கு அனுப்புவதில்லை எனப் பலர் குறைபடுகின்றனர் .
பெரும் மண்டபங்களை எடுத்து களியாட்ட நிகழ்வுகளை அரங்கேற்றி விட்டு, சேரும்பணத்தை மண்டபங்களுக்கும் உணவுக்கும் கணக்கு காட்டிவிட்டு கல்லாப்பெடியை மூடி வைத்துவிட்டு கண்ணை மூடி உட்கார்ந்துவிடுகின்றனர் .
பிரமாண்டமான மண்டபங்களில்த்தான் இந்த நிகழ்வை செய்ய வேண்டும் என்றில்லை – சாதாரண மண்டபங்களில் செய்தாலும் மக்கள் சென்று ஆதரவு வழங்குவார்களே – பிரமாண்டமாக செய்துவிட்டு கணக்கு காட்டுவதற்கு நிகழ்வுகள் எதற்கு ,மக்களுக்கு உதவ வேண்டும் எனில் எளிமையாக செய்து உதவியை அவர்களுக்கு முழுவதுமாக அனுப்பலாம் .
இது தாயகத்தில் நலிவுற்று இருக்கும் அப்பாவி மக்களை பணயம் வைத்து உழைக்கும் ஈனப் பிழைப்பு ,உண்மையில் மக்களுக்கு உதவுபவர்கள் இப்படி ஆடம்பரங்களை விரும்பி செய்துவிட்டு கணக்குகளை காட்டி மக்களை ஏமாற்றுவதை தவிர்க்க வேண்டும் ,
அப்பாவி மக்களின் துயரத்தில் பிழைப்பு நடத்தும் போக்கிரி தனத்தை விட்டு நேர் வழியில் மக்களுக்கு உதவ முன்வாருங்கள் .

