கொழும்பிலுள்ள தாமரைக் கோபுரம் இன்று (11) மாலை ஒளிர்விக்கப்படும் என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இன்று (11) மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிர்விக்கப்படும் என சீனத் தூதரகம் தமது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

