அமெரிக்கா இராணுவத்தின் தாக்குதலில் ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதையடுத்து, கிறீஸ் நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தனது விஜயத்தை இடையில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் இராணுவத் தளபதியின் மரணம் இஸ்ரேலை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா என்பது இஸ்ரேலின் மிக நெருங்கிய நண்பன் ஆகும். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய இஸ்ரேல் தனது பாதுகாப்புச் சபையைக் கூட்டியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்க இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்றுக் காலை ஈராக்கின் விமான நிலையத்தில் வைத்து ஈரான் இராணுவ தளபதியை தாக்கி கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

