மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தவறான மருந்தேற்றலினால் உயிரிழந்த காத்தான்குடி காங்கேயனோடையைச் சேர்ந்த 9ம் ஆண்டு மாணவி ஜப்றாவின் சடலம் நேற்று மாலை காங்கேயனோடை பத்ர் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை அல் அக்சா கல்லூரியில் 9ம் ஆண்டில் கல்வி பயிலும் பாத்திமா ஜப்றா என்ற மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த மாணவிக்கு 2 மில்லி மருந்தை ஏற்றுவதற்கு பதிவாக 20 மில்லி மருந்தை ஏற்றியதால் மாணவி உயிரிழந்திருந்தார்.
இதேவேளை மாணவியின் மரணம் வைத்தியசர்களின் தவறினால் ஏற்பட்டது என்பதை வைத்தியசாலை பணிப்பாளர் கலாரசஞ்சனி ஏற்றுக்கொண்டதுடன் சுகாதார அமைச்சசு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

