கள்ளுத் தவறணையிலிருந்து வந்தவர்கள் பொல்லால் தலையில் தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் குடும்பத்தலை வர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி கதிரிப்பாயைச் சேந்த பசுபதி திருஞானசம்பந்தர் (வயது -–38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
சம்பவத் தினம் அன்று இரவு கள்ளுத் தவறணையிலிருந்து வந்த சிலர், வீட்டு வாசலில் நின்ற சிலருடன் தகாத வார்த்தைகளைப் பேசி முரண்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் மூண்டு கைகலப்பு நிலமைக்கு மாறியது.
இதனை அவதானித்த குடும்பத் தலைவர், இரு தரப்பினருக்கும் இடையே மூண்ட கைகலப்பை விலக்குப் பிடிக்கச் சென்றுள்ளார். இதன்போது அவர் பொல்லால் அடித்துத் தாக்கப்பட்டுள்ளார்.
தலையில் பலத்த காயம்பட்ட நிலையில் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக் காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.