நெவில் பெர்ணாந்டோ வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டதன் பின்னர் அது அரசின் சொத்து. அதற்கு தலைவரை நியமிப்பதும், பணிப்பாளர் சபையை நியமிப்பதும் சுகாதார அமைச்சின் பொறுப்பு என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்ற பின்னர் நெவில் பெர்ணாந்டோ தொடரந்தும் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
நெவில் பெர்ணாந்டோவின் இந்த வைத்தியசாலையை இலவசமாகவே அரசாங்கம் கையகப்படுத்தியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே இவ்வாறு பேசுவதாக அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.