பயங்கரவாத அமைப்பான தலிபான் அமைப்பை உருவாக்கிய மவுலான ஷமி உல் ஹக் பாகிஸ் தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் நாடுகளை பயங்கரவாதம் மூலம் அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான தலிபான் அமைப்பை உருவாக்கியவரும், தலிபான் அமைப்பின் தந்தை என அழைக்கப்படுவருமான மவுலான ஷமி உல் ஹக் பாகிஸ்தான் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 82 வயதான ஷமி உல் ஹக், தாருல் உலாம் ஹக்கினா என்ற பல்கலை கழகத்தை நிர்வகித்து வந்தார். அந்த பல்கலை கழகத்தில் தான் தலிபான் பயங்கரவாத அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது.
தற்போது பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சிக்கு ஷமி ஆதரவு தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவர்மீது மற்ற பயங்கரவாத குழுக்கள் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக்கொன்றது யார் என்ற விவரம் தெரியவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தானில் பரபரப்பு நிலவி வருகிறது.

