ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபன் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
ஆக் திப்பா மாவட்டத்தில் சோதனை சாவடிகள் மீது தலிபான்கள் ஒருங்கிணைந்து இன்று அதிகாலை தாக்குதல்களை நடத்தினர். நடத்தியுள்ளனர். இதற்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
எனினும் இந்த மோதல்களில் அந்நாட்டு பாதுகாப்பு படைவீரர்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் ஜலலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டடத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தி உள்ளான்.
இதனையடுத்து அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஆப்கன் படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இத்தகவலை நங்கர்ஹர் கல்வித்துறை தலைவர் ஆசிப் ஷின்வாரி உறுதி செய்துள்ளார்.