Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலிபானின் ஆட்சியில் மகளிர் உரிமை மிக மோசமா? | ரி 20 தொடரை இரத்துச்செய்தது அவுஸ்திரேலியா

March 19, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது – தலிபான்கள் அறிவிப்பு

Taliban fighters and local residents sit over an Afghan National Army (ANA) humvee vehicle along the roadside in Laghman province on August 15, 2021. (Photo by - / AFP)

ஆப்கானிஸ்தானில் மகளிர்உரிமை மோசமான நிலையில் உள்ளது குறித்து தனது கரிசனையை வெளிப்படுத்தும் விதத்தில் அவுஸ்திரேலிய அணி ஆப்கான் அணியுடனான ரி 20 போட்டித்தொடரை இரத்துச்செய்துள்ளது.

மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த போட்டியை பெண்கள்  உரிமை வீழ்ச்சி குறித்த கரிசனைகளின் அடிப்படையில் இரத்து செய்திருந்த அவுஸ்திரேலியா தற்போது ரி 20 போட்டி தொடரையும்  இரத்துச்செய்துள்ளது.

ஆப்கானில் தலிபானின் ஆட்சியின் கீழ் மகளிர் உரிமை நிலவரம் தொடர்ந்தும் மோசமடைந்துவருகின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன்கலந்தாலோசனைகளை மேற்கொண்ட பின்னர் ரி20 தொடரை இரத்துச்செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஆப்கானில் பெண்கள் யுவதிகளின் நிலைமை மோசமடைகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது இந்த காரணத்தினால் நாங்கள் எங்கள் முந்தைய நிலைப்பாட்டை தொடர்ந்து பேணுவது எனவும்  தொடரை இரத்துச்செய்வது என தீர்மானித்துள்ளோம் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

2020 இல் தலிபான்கள் ஆட்சியைகைப்பற்றி பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதித்ததன் பின்னர் இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று தொடர்களை அவுஸ்திரேலியா இரத்துச்செய்துள்ளது.

2021 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஒரு டெஸ்ட் போட்டியும் இரத்துச்;செய்யப்பட்டது.

Previous Post

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

Next Post

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி

Next Post
15 வயதான தனது சொந்த மகளை கர்ப்பிணியாக்கி குழந்தைக்கு தாயாக்கிய தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures