Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது…. | சஜித் பிரேமதாச

March 14, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்வது தரமற்ற நிலக்கரியையே என்பதை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பம் முதலே வெளிக்கொணர்ந்தது. நுரோச்சோலை மின்நிலையத்தின் மூன்று உற்பத்தி இயந்திரங்கள் நேற்று 810 மெகாவோட் உற்பத்தி செய்திருக்க வேண்டியிருந்தாலும், 680 மெகாவோட்டை மாத்திரமே உற்பத்தி செய்திருந்தது.  எஞ்சிய 130 மெகாவோட் தட்டுப்பாட்டிற்கு தரமற்ற நிலக்கரியே காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

மின்நிலையம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு அலகிலும் 30 மெகாவோட் உள்ளக பயன்பாட்டிற்கு எடுக்கப்படுவதால், 810 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகின்றன. இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 130 மெகாவோட் தட்டுப்பாடு காணப்படுகின்றன.

இதற்கு தரமற்ற நிலக்கரி பயன்பாடே  காரணமாகும். தரமற்ற நிலக்கரி பயன்படுத்துவதால் போதுமான மின் உற்பத்தி இல்லாமல் எரிபொருள் மின்நிலையங்களிலிருந்து மேலதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டிற்கும் மக்களுக்கும் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நஷ்டத்தை நாட்டின் மின்சார நுகர்வோர் தாங்க வேண்டி வருகின்றன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (14) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் நஷ்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் தாங்க வேண்டி காணப்படுகின்றன. இந்த தரமற்ற நிலக்கரியால் அவசர கொள்முதலுக்கு செல்ல வேண்டியிருக்கின்றன. இந்த அவசர கொள்முதலையும் இதுவரை தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்த அதே நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தங்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன. இது ஆபத்தான பிரச்சினை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

வலுச்சக்தி பாதுகாப்பு முற்றுப் பெற்று விட்டன. இப்போது வலுச்சக்தி அபாயமே காணப்படுகின்றன. 

இந்த தரமற்ற நிலக்கரியால் வலுச்சக்தி துறையில் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளன. வலுச்சக்திக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்பட்டாலும், தரமற்ற நிலக்கரியால் அதை செய்ய முடியாமல் போயிருக்கின்றன.

இதனால் உபகரணங்களுக்கு சேதம், சாம்பல் சதவீதம் அதிகரிப்பதால் உடல்நல பாதிப்புகளும் தற்போது ஏற்பட்டுள்ளன. இந்த தரமற்ற நிலக்கரியால் வலுச்சக்தி பாதுகாப்பிற்கு பதிலாக வலுச்சக்தி அபாயமே ஏற்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் கடுமையான அடியாக அமைந்து காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று நுரச்ரோச்சோலை மின்நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்திலும், குறைந்த அளவு மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை கள ரீதியாக தெரிந்தும், தரமற்ற நிலக்கரி பிரச்சினையொன்று இல்லை என நாட்டிற்கு அறிவிப்பது தவறான செயல் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கூட அரசாங்கம் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்கின்றது.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் நாட்டின் வலுச்சக்தித் துறையில் பாதுகாப்பின்மையை உருவாகியுள்ள தருணத்தில், வலுச்சக்தி துறையில் விலை உயர்வு நடைபெறும் தருணத்தில், மக்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தருணத்திலும், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதால் பெரும் சேதமும் பாதிப்பும் ஏற்படுகின்றன. இது நாட்டை அசுத்தப்படுத்தும் செயலாகும்.

இந்த நஷ்டத்தை மக்கள் மீது சுமத்தும் அரசாங்கமே ஆட்சியில் இருந்து வருகின்றது. தற்போதைய அரசாங்கம் இதை செய்வது மோசமான செயலாகும். நாட்டிற்கு இழைக்கும் குற்றமாகும். முறைமையில் மாற்றத்தைக்  கொண்டு வருவோம் என்று கூறி அரசாங்கம் ஊழல் மோசடி செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மின்சார நுகர்வோரிடம் அதிக கட்டணத்தை அறவிட்டு, இந்த ஊழலின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்தியுள்ளது. இப்பெரும் மோசடியின் சுமையை மக்கள் மீது ஏற்றியுள்ளது. இது பொருத்தமான செயலல்ல. மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையைப் பெற்றுக் கொடுத்தது இவ்வாறான விடயங்களை செய்வதற்காக அல்ல என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Previous Post

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை வழங்க நாங்கள் தயார் | தமிழர் விடுதலைக் கூட்டணி

Next Post

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ் 302, றோயல் 175 – 4 விக்.

Next Post
149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ் 302, றோயல் 175 – 4 விக்.

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ் 302, றோயல் 175 - 4 விக்.

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures