தற்கொலைகளை தடுப்பதுதொடர்பாக விசேட கலந்துரையாடல்கள் புத்திஜீவிகள் சபையின் அங்கத்தவர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை தடுப்பு சர்வதேச தினம் அடுத்த மாதம் பத்தாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த கலந்துரையாடல்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கை சுமித்திரோ நிறுவனம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. தற்காலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமது அமைப்பு பகிரங்க சித்திர போட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தற்கொலையை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே சித்திரப் போட்டியின் தொனிப்பொருளாகும். மன உளைச்சல், மனநோய் ஆகிய தற்கொலைக்கு முக்கிய காரணமாகும் என்று இவர்கள் தெரிவித்தனர்.
எவருக்கும் ஏதெனும் பிரச்சினை இருக்குமாயின் இலவசமாக ஆலோசனை வழங்குவதற்காக இலங்கை சுமித்திரோ நிறுவனம் 24 மணித்தியாலும் தயாராக இருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலை முயற்சியை தடுப்பது தொடர்பான தகவல்கள் மற்றும் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் 2003 ஆம் ஆண்டில், தற்கொலையை தடுக்கும் சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையில் வருடம் ஒன்றுக்கு சுமார் நான்காயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வருடத்தில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாகும். இருப்பினும் இலங்கையில் வருடம்தோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை குறைத்து வருவதை காணக்கூடியதாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்pபடத்தக்கது.

