எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகள் நடாத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகள் தடைசெய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2,787 தேர்வு மையங்களில் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
