பாடசாலைகளின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அடுத்த வருடம் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
தபால் துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை ஏற்றுக்கொள்ள கல்வி அரமச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 30 ஆம் திகதிவலை தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பஙடகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை http://www.moe.gov.lk. என்ற கல்வி அமைச்சின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

