அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கவுள்ளார்.
அர்ஜூன் அலோசியசிடமிருந்து பெற்றுக் கொண்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை தனது பாதுகாப்பு அதிகாரியின் ஊடாக மாற்றியுள்ளதாக தயாசிறி ஜயசேகர மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.