தம்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் நீர்ப்பாசன செயலகம் அறிவித்துள்ளது.
நேற்று (25) காலை முதல் பெய்த அதிக மழையினால் நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகளையும் திறக்கவேண்டி ஏற்பட்டதாகவும் அச்செயலகம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று நள்ளிரவுக்குள் மழை குறைவடைந்ததன் காரணமாக அனைத்து வாயில்களையும் மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தம்போவ நீர்த்தேக்கத்தில் இன்று (26) காலையாகும் போது 17 அடி 3 அங்குலம் நீர் காணப்பட்டதாகவும் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

