Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம் பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும் – இரா.சாணக்கியன்

October 27, 2020
in News, Politics, World
0

20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையினை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வாக்களிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஜனநாயக விரோதமான செயல், இந்த நாட்டை பின்கொண்டு செல்லும் செயல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக வாக்களித்திருந்தோம். இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். அது தொடர்பாக பல கருத்துகளை பலரும் கூறிவருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என நான் கருதுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வியாழேந்திரன் மொட்டுக்கட்சியை சேர்ந்தவர். அதனால் அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் ஆனால் பிள்ளையான் அவர்களுடையதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஒரு தனிக்கட்சியாகும் அவர்கள் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்தார்களா என்ற கேள்வி எங்கள் மனதில் இருக்கின்றது.

மயிலந்தனை,மாதவனை பிரச்சினையை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சென்று அதனை நிறுத்தச்சொல்வதை விட 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தருவதாகயிருந்தால் இந்த பிரச்சினையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்க முடியும்.

அல்லது கல்முனை வடக்கு பிரதேச தரமுயர்த்துவது தொடர்பிலான கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம்,அல்லது அரசியல் கைதிகள் 62பேர் இன்னும் உள்ளனர் அவர்களை விடுதலை செய்தால் ஆதரிப்போம் என்றிருக்கலாம்,தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்குமாறு கோரியிருக்க முடியும் இவ்வாறு பல நிபந்தனை முன்வைத்து வாக்களித்திருக்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம் பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும்.அவ்வாறான ஒப்பந்தங்களை ஏதும் செய்ததாக தெரியாது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை வெளியில் விடுவதற்கான ஒப்பந்தமோ அல்லது அக்கட்சியின் தலைவர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தங்களை செய்தார்களா?மக்களுடைய நலனைக்கொண்டா அல்லது தங்களது நலனைக்கொண்டா ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் பதவி ஆசை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏனைய மாவட்டங்களில் இரண்டாவது அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறப்போகின்றது.அபிவிருத்திக்குழுவின் தலைவர் வந்து தான் அனைத்துக் கூட்டங்களும் நடைபெற வேண்டுமானால் அவ்வாறான கூட்டங்கள் அவசியமில்லை.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அனைத்து திணைக்களங்கள்,அனைத்து மக்கள் பிரதிநிதிகள்,அனைத்து அமைப்புகள்,நிறுவனங்கள் வந்து கலந்துகொண்டு பிரச்சினைகளை முன்வைத்து,தீர்வு காண்பது இலகுவாக இருக்கும்.

வெல்லாவெளி பகுதியில் மாடுகள் வனஇலகா பகுதிக்கு சென்றதன் காரணமாக வக்கியல்ல காவற்துறை ஊடாக 20ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

தற்பொது வேளான்மை செய்கை ஆரம்பிக்கப்படும் நிலையில் மாடுகள் மேய்ச்சல் தரைக்கும் செல்லும் நிலையுள்ளது.இவ்வாறான நிலையிலேயே இவற்றுக்கெல்லாம் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

ஒரு தனிநபர் வரவேண்டும்,நான் தான் மாவட்ட அபிவிருத்திக்குழு நடாத்த வேண்டும் என்ற சுயநலத்திற்காக இந்த கூட்டத்தினை பிற்போட வைத்து,தள்ளி வைத்து வருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழும் நிலையேற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளா

Previous Post

மைக் பொம்பியோவின் விஜயத்தால் பேராபத்து!

Next Post

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவி துறப்பு

Next Post

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவி துறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures