Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவது யார்? – வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன்

February 19, 2020
in News, Politics, World
0

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவது யார்? என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்விகள்:- “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” யினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சிக்குள் இணைந்துள்ளதாக கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன?

பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்? அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள்?

ஊடகவியலாளர்:- ஆம்.

பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா? எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்று தான் ஜீ.ஜீ. கூறிவந்தார்.

இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா? அப்படியானால் என்னவென்று? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும்.

தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாக முடியும்.

ஜீ.ஜீ. சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே!

எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சி தான்!

அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம்.

Previous Post

சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை

Next Post

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பல் சேவை

Next Post

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பல் சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures