அரசியல் தீர்வுக்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னர் அரசில் செல்வாக்குச் செலுத்து கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும் பான்மை மற்றும் சிறு பான்மை மக் களின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை ஒருபோதும் உறுதிப்படுத்தியதில்லை.
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் பேசி தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கூட்டு அரசு கொண்டு வருகின்ற முறையற்ற விடயங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வரவு – செலவு திட்டம் மக்களுக்குப் பாதகமானது என்று பொது எதிரணியினர் எதிர்த்த போதும் பெயரளவில் எதிர்க்கட்சியாக செயற்படும் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. இதன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கின்றார்கள்.நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் தீர்வு ஒரு போதும் நிறைவேறாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க மகிந்த அணி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். அரசியல் தீர்வுதான் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது – என்றார்.

