Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்: அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

December 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை (13.12.2022) சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

நம்பிக்கை இல்லை

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்: அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி! | Political Issue Tamil People President Has Called

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியாக நாளை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.

3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்: அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி! | Political Issue Tamil People President Has Called

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது.

அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது.

ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி இணங்கவேண்டும்.

இவ்விடயங்களை நாளைய சந்திப்பில் நான் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.  

Gallery
Previous Post

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்

Next Post

காற்று மாசடைவு மீண்டும் அதிகரிப்பு ; ஓரிரு தினங்களுக்கு இந்நிலை தொடருமாம்

Next Post
நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் : 8 மாவட்டங்களில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் பலி

காற்று மாசடைவு மீண்டும் அதிகரிப்பு ; ஓரிரு தினங்களுக்கு இந்நிலை தொடருமாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures