Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான துரும்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம்!

February 19, 2022
in News, Sri Lanka News
0
“காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் சிலர் பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்”

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கான துரும்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம் என தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக தமிழ் கட்சிகளிடத்தில் முக்கியமாக TNA, விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சி இவர்களைப் பார்த்தால் இவர்தான் கடந்த காலங்களில் 2015 லேயே காணாமல் ஆக்கப்பட்ட போராட்டங்களை நலிவு படுத்துவதற்குரிய கால நீடிப்புகளை வழங்கி இருந்ததும், அத்தோடு OMP என்ற, ஒரு சட்ட மூலத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததும், அத்தோடு இழப்பீட்டு பணியகத்துக்குரிய, ஆதரவை பாராளுமன்றத்தில் வரவு, செலவு திட்டத்துக்கு வழங்கியதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயங்களுக்கு ஒரு சர்வதேச நீதிக்கான அணுகுமுறையில் இல்லை.

ஆனால் அதன் பின்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்த பின்பு ஐநாவுக்கான கடிதத்தில் சர்வதேச விசாரணை என்ற ஒரு கோரிக்கையில் கடிதம் அனுப்பப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆனால் இருந்த போதும் ஏற்கனவே OMP என்ற அலுவலகத்தை அனுமதி வழங்கிவிட்டு பின்பு சர்வதேச விசாரணையினை கோருவது உலகத்தால் வேடிக்கையாகதான் பார்க்கப்படும்.

அந்த சூழல் இப்பவும் தொடருகிறது. காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தினை முடக்குறதுக்குரிய வேலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபடுகிறது.

அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சரியான பாதையில் சொல்லுது. அதை நாங்கள் கடந்த முறை வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடுகின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்ற தமிழர் தாயக சங்கத்தினுடைய அடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

அந்த கட்சி சரியான பாதையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிதான் தேவையென்றதில் உறுதியா இருக்கு.

நேரடியாக கடிதத்தை ஐநாக்கு சாட்சியங்களையும், வழங்கியிருக்கிறார்கள். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்புகளின் சாட்சியங்களையும் நேரடியாக வழங்கியிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் நடந்த மாபெரும் அரசியல் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் கூட அவர்கள் சர்வதேச நீதிதான் காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கு என கூறியிருந்தார்கள்.

அதில் முக்கியமாக அரசியல் அமைப்பை பற்றி கதைப்பதாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தும் அதற்கு உடன்பட்டு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை, பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்கப்போறதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களோ அல்லது தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கான நீதியையோ நாங்களே மறுப்பதாக முடியும்.

ஏனென்றால் ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டால் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை, நாங்கள் தேட இயலாது.

இழப்பீடுகளுடன் எங்களுடைய விடயத்தை இலங்கை பிரச்சினையாக்கி, இந்த இழப்புகளுடன் இந்த போராட்டம் அனைத்து விடயங்களும் நீதி கிடைக்காமல் போகும். அது ஒரு ஆபத்தான சூழல் என்ற ரீதியில் நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கிறோம்.

அந்த ரீதியில் இந்த போராட்டத்துடன் புலம்பெயர் மக்கள் முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

ஏனென்றால் மக்கள் போராட்டமாக நடக்குறதுக்கு ஆதரவு வழங்கினோம். அது கடந்த காலங்களிலும் புலம்பெயர் மக்களுடைய ஆதரவு இருக்கிறது.

அந்த ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய போராட்டம் மக்கள் போராட்டமாக, நீடித்து வலுவாக செல்லுது. அதில் அண்மைக்காலமாக, நீதிமன்றங்கள் அதாவது அலி சப்ரி தலைமையில் வடக்கு விஜயமான விடயத்தில் சில அம்மாக்கள், காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாரை வழிநடத்துபவர்கள் அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை செய்யவிட்டு சர்வதேச ரீதியிலும் அம்மாமாரும், நீதிக்கெதிரானவர்கள் என்ற ஒரு தோற்றப்பாட்டை காட்ட வெளிக்கிட்டவர்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், நாங்கள் இலங்கை அரசாங்கம் தீர்வு தராது என நாங்கள் அமெரிக்க , ஐரோப்பிய நாட்டினை கூப்பிடுகிறோம்.

அந்த அம்மாக்கள் எல்லோரும் சர்வதேசம்தான் நீதிதர வேண்டும் என்று கூறிவிட்டு நாங்கள் இலங்கை அரசாங்கத்தோட போய் பேசி கொண்டிருக்கிறது அழகில்லை. இது அந்த அம்மாக்களுக்கு யாரோ தவறாக அறிவித்திருக்கிறார்கள்.

அதிலும் பெரிய அளவிலும் கனபேர் போய் போராடவில்லை. கணிசமான அம்மாக்கள் தான் போராடி இருந்தார்கள். இந்த சூழலில் இது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துது.

அதனால்தான் அலிசப்ரி அவர்களை அரசாங்கத்துடன் இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை பேச வருமாறு கூறியதும் இதில் கவலை அளிக்கிற விடயம் என்னவென்றால், ஏற்கனவே நான்கு , ஐந்து முறை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அரசாங்கம் தீர்வை தராது இது ஒரு அரசியல் பிரச்சினை என்று கூட கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த காலத்தில் சொன்ன பின்பு போய் நாங்கள் சந்திக்கிறது அழகில்லை.

உண்மையாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தனியாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஒரு விடயம் இல்லை. தமிழ் இனத்தினுடைய வாழ்வுரிமைக்கான பிரச்சினை. தேசிய இன பிரச்சினையில் முக்கிய அங்கம், தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கான துரும்பு   காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம். ஏனென்றால் ஒரு நாடு அந்த மக்களை காணாமல் ஆக்கி இருக்கு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கு.

அந்த மக்கள் அவர்களோட இருக்க வேண்டும் என்பதை ஒரு சர்வதேச நீதிதான். தமிழ் மக்களுக்கு இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு நீதி, உண்மையான பிள்ளைகளை கண்டுபிடிக்கிறதுக்கு, ஒரு பொறிமுறையையும் உருவாக்கும்.

அந்த ரீதியில் நாங்கள் இந்த போராட்டத்தை ஒரு சட்ட பிரச்சினையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம் ஒரு சட்ட பிரச்சினை இல்லை.

ஒரு அரசியல் பிரச்சினை. அரசியல் ரீதியாக தீர்க்கப்படும்போது தான் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதனால் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்வாற அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஏற்காத, நிராகரிக்கிற பட்சத்தில்தான் இந்த காணாமல் ஆக்கப்பட்ட விடயம், காணி விடயம், தமிழ் மக்களுக்கான நீதி, இவ்வளவு நீண்ட கால யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்குரிய நீதி கிடைக்கும்.

அதற்கு சர்வதேச பொறிமுறை ஊடாக எங்களுக்கான ஐநா ஊடாக நீதியை பெறுவதற்குரிய வேலையை உறுதியோடு நாங்கள் இந்த போராட்டத்தில் 1827 ஆவது நாளாக உறுதி வாய்ந்த பயணத்தினை நாங்கள் மேற்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கடைசி விவசாயி | திரைவிமர்சனம்

Next Post

பாணின் விலை 400 ரூபாவாகும்! | பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

Next Post
பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் | எதிரணி எதிர்வுகூறல்

பாணின் விலை 400 ரூபாவாகும்! | பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures