தமிழ் தேசிய பேரவையின் கரவெட்டி பிரதேச சபை வேட்பாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்.மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரவெட்டி பிரதேச சபை வேட்பாளரான கந்தப்பு கிரிதரன் என்பவர் இராஜகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (07) இரவு தாக்குதலுக்கு உள்ளான நிலையில், யாழ்.மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.