நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தற்போது பெரும் பரபரப்பான சூழலை அரசியல் தலைவர்களுக்கு வழங்கியிருக்கின்றது.
இந்த நிலையில், தமிழ் தாயகம் எங்கும் பல கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்துள்ள நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கவகையில் உள்ளூராட்சிசபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், ஈ.பி.டி.பி உயர்மட்டம் இது தொடர்பில் இறுதி முடிவெடுத்துள்ளது.
அந்த படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வெளியிலிருந்து ஆதரிக்க முடிவெடுத்துள்ளது.
அதாவது, அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த ஆதரவை வழங்குவதென்றும், ஆறு மாத காலத்தில் திருப்திகரமான நிர்வாகத்தை வழங்கினால் ஆதரவை தொடர்வதென்றும் முடிவெடுத்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.