தமிழ் தேசிய கூட்டமைப்பின் முறையற்ற செயல்கள் காரணமாகவே கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பதவி போட்டிகள், ஒற்றுமையின்மை மற்றும் ஒரு தலைமையின் கீழ் இயங்கும் மனபாங்கு இல்லாத காரணங்களினாலே தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு பல கட்சிகள் தோற்றம் பெற வித்திட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்து குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போதே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்

