எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இணங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

