‘நீண்ட நாட்களுக்கு பின், நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைத்துள்ளது’ என, சந்தோஷத்துடன் கூறுகிறார், யாமி கவுதம். இவர், தமிழில், கவுரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதை தவிர்க்கும் யாமி, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே, புதிய படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது, 2016ல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினர். இதை மையமாக வைத்து, ஹிந்தியில் தயாரான, யுரி படத்தில், யாமி நடித்தார். இந்த படம், சமீபத்தில் வெளியாகி, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்ததால், சந்தோஷத்தில் திளைக்கிறார், அவர்.











