புதுமுக நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ குமாரசம்பவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் எமோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான சசிகுமார்- ஆர்யா- சிம்ரன்- இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோர் இணைந்து ,அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகரும், இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ குமார சம்பவம்’ எனும் திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், ஜி எம் குமார், பால சரவணன், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘ யாத்திசை ‘ எனும் வெற்றி படத்தை வழங்கிய தயாரிப்பு நிறுவனமான வீனஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. ஜே. கணேஷ் மற்றும் கே. ஆர். ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் எமோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டுவது போல் அமைந்திருப்பதால் இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்து வருகிறது.