தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். கந்தர்மடம் பகுதியில் நேற்று (31) மாலை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டு, இணைத்தலைவருக்கான உரையை நிகழ்த்தும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இளைஞர்கள் ஒருமித்த தீர்மானங்களை மேற்கொண்டு, நம்மை நாமே ஆளக்கூடிய உறுதியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

