வட சென்னை, மாரி-2 படங்களில் நடித்து வரும் தனுஷ், ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை கென் ஸ்காட் இயக்கியுள்ளார்.
காமெடி அட்வெஞ்சரான இந்தப் படம், இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை உலகம் முழுக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதை டப் செய்து தமிழிலும் வெளியிட வேண்டும் விரும்பிய தனுஷ், சோனி நிறுவனத்திடம் பேசியுள்ளார். தனுஷின் விருப்பத்தை ஏற்று அப்படத்தை தமிழில் வெளியிடுகின்றனர். ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் தனுஷ். அவரது நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊதுங்கடா சங்கு’ என்ற பாடலில் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற வரி இடம்பெற்றது.
தனுஷ் எழுதிய அந்த வரியையே தன்னுடைய படத்துக்குத் தலைப்பாக வைத்துவிட்டார் தனுஷ்.