இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன் காரணமாக இன்றைய தினம் அரசவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கிலேயே இவ்வாறு அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ,பொது இடங்களில் கூடவோ வேண்டாம்.
கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோரையும் பாதுகாக்கவும்” என பதிவிட்டுள்ளார்.


