புது வருடத்தில் கொண்டாடப்படவுள்ள இலங்கை தேசிய சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரத்தில் உண்மையில்லையென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் குறித்து அமைச்சரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அவ்வாறு எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை. போலியான செய்திகளே பரப்பப்பட்டு வருகின்றன. அமைச்சரவை கூட கூடாதுள்ள சந்தர்ப்பத்தில் எவ்வாறு அத்தகை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூற முடியும்? தமிழ் மொழியில் தேசிய கீதம் படாப்படாதென்ற எவ்வித தீர்மானமும் இதுவரை அமைச்சரவையில் எடுக்கப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர தின ஏற்பாட்டுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இம்முறை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவித்த கருத்திருந்த கருத்துக்கு, தமிழ் அரசியல் தலைமைகள் தமது எதிர்ப்புக்களை கடுமையாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அமைச்சர் டளஸ் அழகப்பெரும இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

