ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விஜயம் செய்யும் போது, இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.