இலங்கை ஜனாதிபதியின் அக்ராசன உரை தொடர்பிலான, ஒத்திவைக்கப்பட்ட விவாதத்துக்காக நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நேரம் அதிகமானது என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இதனை இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான பதில்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அந்த உரையில் எவ்வித விடயங்களும் இருக்கவில்லை. எனவே அவரின் உரை தொடர்பில் விவாதிக்க ஒதுக்கப்பட்ட நேரம் அதிகமானது என்று சுமந்திரன் குறிப்பிட்டார்
நாட்டில் இன்று பாரிய பொருளாதார பிரச்சினை உள்ளபோதும் அதற்கான தீர்வுகளையும் பதில்களையும் ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
இந்தநிலையில் தமது உரையில் அவர் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கூறவில்லை.
அத்துடன் அவருடைய உரையில் எவ்வித தகவல்களும் இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் பேசியபோது நல்லிணக்கம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் வடக்குகிழக்கு மக்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான நல்லிணக்கம் என்று அவர் தமது உரையில் தெரிவித்திருந்தார்.
வடக்குகிழக்கில் இடம்பெற்ற போராட்டம், இறைமைக்கான, அரசியல் உரிமைக்காக, அதிகாரப்பரவலாக்களுக்கான போராட்டமாகும்.
எனினும் ஜனாதிபதி தமது உரையில் அந்த போராட்டத்தின் தன்மையை குறைத்து மதிப்பிட்டதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]