தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பேர்ணாம்பட்டு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]