கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த இரு நாட்கள் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடல்பகுதியில் நிலவுவதாகக் கூறினார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இருநாட்களுக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

