Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தபால் மூல வாக்காளர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு

March 12, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினைத்  தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்காளர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு | Last Day To Accept Applications For Postal Voting

அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபாலில் ஏற்படக்கூடிய கால தாமதங்களையும் ,தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திற் கொண்டு இந்த தீர்மானத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (NPP) இன்றைய தினம்(12) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். 

தபால் மூல வாக்காளர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு | Last Day To Accept Applications For Postal Voting

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மேலும், பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அஷேக் சதீக் முப்தி முசலி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினம் இன்றாகும்.

அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்புமனு அறிவிப்புகள் 

அத்துடன் வேட்புமனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை மார்ச் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்காளர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு | Last Day To Accept Applications For Postal Voting

இதற்கிடையில், எதிர்வரும் மார்ச் மாதம்13 ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று அந்த ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷ்

Next Post

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

Next Post
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures