எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ன.
இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய நான்கு தினங்களில் தபால் மூலம் வாக்களிப்பு செய்ய முடியும்.
தபால் மூல வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகளை அடுத்து வரும் நாட்களில் வெளியிட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

