தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தரக்கோரி 23 தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 4 மணி வரை தபால் நிலையங்களில் சாதாரண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், 4 மணியின் பின்னர் குறித்த ஊழியர்கள் பணிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.