தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நண்பகல் அளவில், நாட்டின் சில பிரதேசங்களில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், கம்பஹா, காலி, பதுளை, ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை அமைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்தார்.
தற்போது வரை தபால் திணைக்களத்திலுள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.